ரஜினி புதிய ஆளுமையா உருவாகிட்டு வராருன்னு அவருடைய ரசிகர்கள் உண்மைய தான சொல்றாங்க. அவர் பேசினா அதிருதுல்ல. ஒரு கருத்து சொன்னா நாடே சும்மா அதிருதுல்ல என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் புகழ்ந்துள்ளார். 

ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர். ஆன்மிகத்தை பொறுத்தவரை ரஜினி சொன்னதில் தப்பில்லை. அவரது ரசிகர்கள்தான் பொறுமையாக உள்ளனர். தமிழச்சியை திருமணம் செய்த மனிதரை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. நடப்பு நிகழ்வு அரசியல் சமுதாய சூழல்களை அப்பட்டமாக உண்மையை கூறி பேச் வருகிறார். அதனால் வரக்கூடிய நல்லது கெட்டதுகளை பற்றி அவர் யோசிப்பது கிடையாது. அவர் பேசுகிறார் என்றால் அவரது கருத்துக்கு பிறகு என்ன பிரச்னை இருக்கிறது என்பதை எதிர்தரப்பினர் சொல்ல வேண்டும். 

இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சிகள்காணாமல் போய்விடும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், கண்டிக்கப் படுவார்கள். ரஜினியை என்ன மிரட்டுகிறீர்களா? நீங்கள் மிரட்டுவதற்கெல்லாம் இளிச்சாப்பையன் கிடையாது அவர் என ராஜேந்திர பாலாஜி பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மீண்டும் ரஜினியின் புகழை வானளாவ புகழ்ந்துள்ளார் ராஜேந்திர பாலாஜி, ‘’ரஜினி புதிய ஆளுமையா உருவாகிட்டு வராருன்னு அவருடைய ரசிகர்கள் உண்மைய தான சொல்றாங்க. அவர் பேசினா அதிருதுல்ல. ஒரு கருத்து சொன்னா நாடே சும்மா அதிருதுல்ல.

அவருக்கு 70 வயசு ஆயிடுச்சு. இந்த வயசிலயும் அவர் ஒரு படம் நடிச்சார்னா 500 கோடிக்கு விற்பனையாகுது.  இன்னமும் அவர் படம் உலகம் முழுக்க ஓடிக்கிட்டு இருக்கில்ல. இந்தியாவுல எந்த நடிகர் கதாநாயகனா 70 வயசுல நடிக்கிறாங்க சொல்லுங்க? அப்ப அவருக்குன்னு ஒரு மாஸ் இருக்கு மவுசு இருக்கு. ரஜினிக்கு மாஸ் இருக்கிறத யாராலும் மறுக்க முடியாது. அதை மறைச்சு பேச நினைச்சா அது தப்பு’’எனத் தெரிவித்துள்ளார்.