Asianet News TamilAsianet News Tamil

பெட்ரோல் ரூ.200க்கு விற்றால் ஒரே பைக்கில் 3 பேர் பயணிக்கலாம்..! பச்சைகொடி காட்டும் பாஜக தலைவர்..!

டீசல் ஒரு லிட்டர், 99.26 ரூபாய், பெட்ரோல் ஒரு லிட்டர் 103.31 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

If petrol is sold for Rs.200, 3 people can travel on the same bike ..! BJP leader showing green flag
Author
India, First Published Oct 20, 2021, 10:56 AM IST

பண்டிகை காலம் நெருங்க நெருங்க மக்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய், காய்கறி ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 1 மாதமாக மக்கள் அதிகளவில் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை 2 நாள் இடைவேளையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர், 99.26 ரூபாய், பெட்ரோல் ஒரு லிட்டர் 103.31 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. If petrol is sold for Rs.200, 3 people can travel on the same bike ..! BJP leader showing green flag

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ தொட்டால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசு அனுமதி வழங்கும்’ என்று அசாம் மாநில பாஜ தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர், ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 ஆக உயரும் போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம். இருப்பினும், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்’ என்று கூறியுள்ளார். If petrol is sold for Rs.200, 3 people can travel on the same bike ..! BJP leader showing green flag

இது குறித்து அசாம் மாநில காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் போபீதா சர்மா கூறுகையில், ‘சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலையை பாஜ அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது. அதன் பயனை மக்களுக்கு வழங்க அவர்களுக்கு மனமில்லை,’ என்று கூறினார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios