Asianet News TamilAsianet News Tamil

நூறு ரூபாய் இருந்தால் மட்டும் அருகில் வா...!

காரிலிருந்து இறங்கிய வைகோவிடம் கட்சியினர் ஒவ்வொருவராக  100 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்நிலையில்  வைகோ அங்கு வந்திருப்பதை கண்ட ஒருவர் ஓடிவந்து அவருடன்  போட்டோ எடுக்க அருகில் நின்றார். கட்சிக்காரர் என எண்ணிய வைகோ அவரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அந்த நபரை வைகோ விரட்டியடித்தார்.

if only 100 rupees
Author
Krishnagiri, First Published Aug 15, 2019, 2:31 PM IST

போட்டோ எடுக்க 100 ரூபாய் தர வேண்டும் என்ற விவரம் தெரியாமல் அன்பாக ஒடி வந்து அருகில் நின் நபரை வைகோ விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. if only 100 rupees

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி அளிக்கலாம். 
அவருடன்  புகைப்படம் எடுக்க விரும்புவோர் குறைந்தது 100 ரூபாய் வழங்கினால் மட்டுமே இனி புகைப்படம் என அறிக்கை அனுப்பி கண்டிப்பு காட்டியது மதிமுக .இந்திலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளவதற்காக வைகோ கார் மூலம் ஆம்பூர்  வழியாக கிருஷ்ணகிரி சென்றார், அப்போது அவருக்கு ஆம்பூரில் வரவேற்பு அளிக்க மதிமுகவினர் காத்திருந்தனர். வைகோவின் கார் ஆம்பூரை அடைந்தவுடன் அங்கிருந்த தொண்டர்கள் மேலதாளங்களு முழங்க, பட்டாசு வெடித்து வைகோவை உற்சாகமாக  வரவேற்றனர். if only 100 rupees

பின்னர் காரிலிருந்து இறங்கிய வைகோவிடம் கட்சியினர் ஒவ்வொருவராக  100 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்நிலையில்  வைகோ அங்கு வந்திருப்பதை கண்ட ஒருவர் ஓடிவந்து அவருடன்  போட்டோ எடுக்க அருகில் நின்றார். கட்சிக்காரர் என எண்ணிய  வைகோ அவரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அந்த நபரை வைகோ விரட்டியடித்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை விடோயோ எடுத்த யாரோ ஒருவர் அதை சமூக வலைதளத்தில் பரப்ப அது வைகோவின் மீது விமர்சனைத்தை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையே சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரை சென்ற வைகோ ஆங்காங்கே நின்று செல்பி எடுத்து பணம் வசூல் செய்ததில் ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் வரை வசூல் ஆனதாக மதிமுகவினர் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios