Asianet News TamilAsianet News Tamil

தேவையெனில் வழக்கு மோடி மீது போடுங்க.. நீதிமன்ற வளாகத்தில் கொதித்த தமிமுன் அன்சாரி..

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா. சுப.வீ உள்ளிட்டோர் வர இயலாமைக்கான அனுமதி பெற்றிருந்தனர்.

If necessary, file a case against Modi.  Tamimun Ansari Obsession in the court premises ..
Author
Chennai, First Published Sep 7, 2021, 5:20 PM IST

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு, குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கை போராட்டம் ஆகிய வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில்  தனித்தனி பிரிவுகளில் கட்சித் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் துறைமுக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதில் 

மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி, முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன், இயக்குனர் அமீர், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பேராசிரியை சரஸ்வதி, தோழர் தவசி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப், தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், பொழிலன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா. சுப.வீ உள்ளிட்டோர் வர இயலாமைக்கான அனுமதி பெற்றிருந்தனர். 

If necessary, file a case against Modi.  Tamimun Ansari Obsession in the court premises ..

நீதிமன்ற நிகழ்வுக்கு பிறகு முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, இயக்குனர்கள் கெளதமன் மற்றும் அமீர் ஆகியோருடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் எம்ஏல்ஏ அன்சாரி அவர்கள் கூறியதாவது, நாங்கள் இன்று சந்தித்துள்ள வழக்குகளை எல்லாம் திரும்ப பெறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதற்கான முறையான அரசாணை (G.O) இன்னும் வெளியிடப்படவில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த அறிவிப்பை தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும்.

If necessary, file a case against Modi.  Tamimun Ansari Obsession in the court premises .. 

நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காகவே போராடினோம். தொடர்ந்து அவற்றுக்காக குரல் கொடுப்போம். நாங்கள் அமைதியாக ஜனநாயக வழியில் போராடினோம். மக்களுக்கு இடையூறு செய்யவில்லை. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வில்லை. மக்களின் பொதுச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பிரதமர் மோடிதான். தேவையெனில் இது போன்ற வழக்குகளை அவர் மீது தான் போட வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார். இன்று பல அரசியல் கட்சிகளில் தலைவர்களின் வருகையையொட்டி நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios