Asianet News TamilAsianet News Tamil

மோடி காலில் விழுந்தாலும் அது மட்டும் முடியாது... ஓ.பி.எஸை கதிகலங்க வைக்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!

துணை முதல்வரும், தோல்வி பயத்தால் வாரணாசி சென்ற போது, மோடியின் காலில் விழுந்து தனது பையனை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் துணை முதல்வா யார் காலில் விழுந்தாலும் அவர் பையனும் வெற்றி அடைய போவதில்லை.

If Modi falls in the feet, it can not be alone
Author
Tamil Nadu, First Published May 8, 2019, 6:37 PM IST

தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டணி கட்சியினருடன் தேனி மாவட்ட அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், புதிதாக கொண்டுவரப்பட்ட 50 வாக்குப்பதிவு மெஷின்களை மீண்டும் கோவைக்கே எடுத்துச் செல்ல வேண்டும்.

If Modi falls in the feet, it can not be alone

தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான அவசியமே ஏற்படவில்லை. அதுபோன்ற நிலையில் மீண்டும் இரண்டு மையங்களில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறுவது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது’’ எனக் குறிப்ப்ட்டுள்ளார். If Modi falls in the feet, it can not be alone

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’நடந்து முடிந்த தேனி மக்களவை தொகுதியில் தேர்தல் சிறப்பாக எந்தவித பிரச்சனையும் இன்றி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடந்து முடிந்துள்ளது. ஆகவே மறு தேர்தல் நடத்த தேவையில்லை என்று  மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கூறியுள்ளோம். கோவையில் இருந்து கொண்டுவந்த 50 மெஷின்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.If Modi falls in the feet, it can not be alone

துணை முதல்வரும், தோல்வி பயத்தால் வாரணாசி சென்ற போது, மோடியின் காலில் விழுந்து தனது பையனை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் துணை முதல்வா யார் காலில் விழுந்தாலும் அவர் பையனும் வெற்றி அடைய போவதில்லை. துணை முதல்வர் ஏதாவது செய்துவிடலாம் என்று நினைத்தாதல் கட்சிக்காரர்களும், பொதுமக்களும், பெரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios