காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் மக்கள் நீதி மய்யம் நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின்  உயர்நிலைக்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார், கமல் முதலமைச்சரானால் அவர் போடும் இரண்டாவது கையெழுத்து மனிதர் மலத்தை மனிதரே அள்ளுவதற்கு தடை விதிப்பதற்குத்தான் என்று  தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம்  என்ற கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியை வளர்ப்பதற்கான  பல்வேறு நடவடிக்கைகளை கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற கமல்ஹாசன் இப்பிரச்சனைக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

இந்நிலையில் திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்கக்காததற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன் பேசுவதற்கு முன்பு அக்கடசியின்  உயர் நிலைக்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார். அப்போது கமல் முதலமைச்சரானால் அவர் போடும் இரண்டாவது கையெழுத்து மனிதர் மலத்தை மனிதரே அள்ளுவதற்கு தடை விதிப்பதற்குத்தான் என்று  கூறினார்.

தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமார் ,கமல்ஹாசனின் கொள்கைகள் குறித்து  பொது மக்களிடம் விளக்கம் அளித்தார்.