If Kamal comes to politics he will disappear

நடிகர் கமல் ஹாசன், அரசியலில் கால் பதித்தால் கானாமல் போவார் என்று செய்தி மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

‘நடிகர் கமல் ஹாசன், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்திருந்தார். அப்போது? அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பது போன்றது என்று கூறியிருந்தார்.

அரசியல் என்பரு ஒரு புதைக்குழி என்ற நிலையை மாற்றி, அதை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே தற்போதைய தேவை எனவும், அரசியல்வாதி ஆவதற்கு முன், என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கமல் கூறினார்.

மக்களின் ஆதரவு இல்லாமல் எதையுமே செய்ய முடியாது எனவும், உடனே பெரிய மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கூற இயலாது எனவும் கமல் கருத்து தெரிவித்திருந்தார்.

கமல் அரசியலுக்கு வருவது குறித்து தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிஜ வாழ்க்கையில் கமல் ஹாசன் முதலமைச்சராக முடியாது எனவும் திரைப்படத்தில் வேண்டுமானால அவர் முதலமைச்சராகலாம் எனவும் கூறியிருந்தார்.

இதேபோல், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசியலில் நடிகர் கமல் ஹாசன் கால் பதித்தால் காணாமல் போவார் என்று கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.