கலைஞர்  கை அசைச்சா தான் வீட்டுக்கு போவோம்..இல்லனா இங்கேயே.... மருத்துமனை வாசலில் உருகும் தொண்டர்கள்...!

திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என  தகவல்  வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம்  மற்றும் காவேரி மருத்துவமனை  முன்பு குவிந்தனர்.

நேற்று மாலை முதல்  தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வந்தனர். கலைஞரின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பாட்டு பின்பு அதனை சரி செய்யப்பட்டு தற்போது சீராக உள்ளது என நேற்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு  இருந்தது.

அதுமட்டுமில்லாமல், தொண்டர்களை கலைந்து செல்லும்படி காவல் துறையினர் எவ்வளவு சொல்லியும் தொண்டர்கள் பலர் அந்த இடத்தில இருந்து நகர்வதாக  இல்லை.

இதே போன்று கோபாலபுரம் இல்லம் முன்பும், தொண்டர்கள் குவிந்ததால், வெளியில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காவேரி மருதுவமனை வெளியில் கூடி இருக்கும் தொண்டர்களில்  சிலர், "கலைஞர் கை  அசைச்சா நாங்க வீட்டுக்கோ போவோம்..இல்லனா இங்கேயே  சாவோம் என  எமோஷனாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்

மேலும் வேலூரை சேர்ந்த தொண்டர் ஒருவர் கலைஞர் நலம் பெற வேண்டும் என   மொட்டை போட்டு  உள்ளார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பிரார்த்தனை  செய்து வருகின்றனர்.

"எழுந்து வா தலைவா" என  காவேரி மருத்துவமனை முன்பு நின்று தொண்டர்கள்  கோஷம் எழுப்பி வருகின்றனர்.