ஒன்றுமேயில்லாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அழிந்ததுதான் வரலாறு. உதாரணம் AGP,JDS, SAD,PDP அதிமுகவும் அப்பட்டியலில் சேரும் என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இந்நிலையில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பி சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி “அடிமை அதிமுக பிஜேபிக்கு பயந்து வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு பிஜேபி இழைக்கும் துரோகங்களுக்குத் துணைநிற்கிறது. ஒன்றுமேயில்லாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அழிந்ததுதான் வரலாறு. உதாரணம் AGP,JDS, SAD,PDP அதிமுகவும் அப்பட்டியலில் சேரும்” என்று தெரிவித்துள்ளார். பாஜக அரசின் வேல் யாத்திரை குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் “சட்டம் தன் கடமையை செய்யும்” என கூறியுள்ளது