Asianet News TamilAsianet News Tamil

முடிவெடுத்தால் முதல்வர்தான் .. விஜய்யை சூடேற்றி.. ஸ்டாலினை வெறுப்பேற்றும் விஜய் மக்கள் இயக்கம். வைரல் போஸ்டர்

எப்படியோ 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவரின் முடிவு என்ன என்பது உறுதியாகிவிடும், இந்நிலையில்தான் 2026  முதல்வர் வேட்பாளர் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், முடிவு எடுத்தால் முதல்வர்தான் என நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் அடிக்கடி சுவாரசியமாக போஸ்டரை ஒட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

If he decides, he will be the Chief Minister .. Heat Vijay .. Vijay people's movement that hates Stalin. Viral poster
Author
Chennai, First Published Mar 24, 2022, 12:08 PM IST

முடிவு எடுத்தால் முதல்வர்தான் என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2021ல்  தளபதி ஸ்டிலின் ஆட்சி 2026இல் தளபதி விஜய் ஆட்சி என ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

நடிகர் எம்ஜிஆருக்கு பிறகு சினிமாவில் ஓரளவிற்கு வெற்றி பெற்றவர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அதற்கடுத்து தேர்தல் காலத்தில் இதோ குதிக்கப் போகிறார் அதோ குதிக்கப் போகிறார் என பரபரப்பு காட்டி, அரசியலே வேண்டாம்ப்பா என ஒதுங்கிக் கொண்ட ரஜினிக்கு அடுத்து, அரசியலில் குதித்தே தீருவேன் என அடம்பிடித்து வருகிறார் இளையதளபதி விஜய். நீண்டகாலமாகவே அரசியல் கனவில் மிதந்து வருகிறார் என்றே சொல்லலாம். இதன் எதிரொலியாக தான் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது எனலாம். 

If he decides, he will be the Chief Minister .. Heat Vijay .. Vijay people's movement that hates Stalin. Viral poster

திமுகவுக்கு எதிராக வலுவான கட்சி தமிழகத்திற்கு வேண்டும், அதிமுக பாஜகவுக்கு மாற்று சக்தி  தொடங்க வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தங்கள் பலத்தை அறிய, பலத்தை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்காக நடிகர் விஜய் சமீபத்தில் ஹைதராபாத் சென்று தேர்தல் வியூகம் வகுப்பாளர்கள்  பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், விஜய் கட்சி தொடங்கினால் அதிமுகவில் இருந்து அவரை நோக்கி பலர் வருவார்கள் என்றும்,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை துவக்கி போட்டியிட்டால்  குறைந்தபட்சம் 10 சதவீத ஓட்டுகளை பெற்று திமுக அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக வர தங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் தரப்பினர் நம்பி வருகின்றனர்.

அதன்பின் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் சில வாய்ப்புகள் குறித்து அறிய பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்தார் என கூறி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வெகு காலமாகவே உள்ளது. இதற்கு அவரது தந்தை சந்திரசேகர் காட்டிய பேராசைதான் காரணம் என்றும் ஒரு கட்டத்தில் தன் தந்தையின் வேகம் தன் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் அவரது முயற்சிகளுக்கு விஜய் தடை போட்டார், இருந்தாலும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் ரசிகர்மன்ற ஆட்களை விஜய் போட்டியிட வைத்து அதில் ஒரு சில இடங்களில் வெற்றியும் கிடைத்தது. இதையடுத்து அவர் அரசியலின் ஆழம் காண அவர் விரும்புகிறார். ஆனால் நடிகர் விஜய்யும் நடிகர் ரஜினியை போலத்தான், வெற்றி கிடைக்குமென 100% உறுதியாக தெரிந்தால் மட்டுமே எதிலும் முழுமையாக களமிறங்குவார்.

If he decides, he will be the Chief Minister .. Heat Vijay .. Vijay people's movement that hates Stalin. Viral poster

இல்லையேல் எடுத்த முயற்சிகளை சினிமா பட விளம்பரமாக்கி படத்தை வியாபாரமாக்கி விடுவார் என்றும், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு கூட அப்படி பட்டதாக இருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் நடிகர் எம்ஜிஆரை போல தன்னால் பெரிய அளவிற்கு வெற்றி பெற முடியாது, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ரஜினிகாந்த் கூட அரசியலுக்கு வர தயங்கினார், ஆனால் ஒரு குறிப்பிட்ட இளம் வட்டத்தினரை மட்டும் ஆதரவாளராக கொண்டிருக்கிற அவருக்கு தன்னுடைய பலம் என்ன என்பது தெரியும், அதில் தற்போதுள்ள வாக்காளர்கள் படித்தவர்கள், அவர் திமுகவின் தீவிர ஆதரவாளர், அதனால் திமுக அவரை B டீம்மாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது, அதைதான் இப்போது அவரும் செய்து வருகிறார்கள் என பாஜக தரப்பினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

எப்படியோ 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவரின் முடிவு என்ன என்பது உறுதியாகிவிடும், இந்நிலையில்தான் 2026  முதல்வர் வேட்பாளர் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், முடிவு எடுத்தால் முதல்வர்தான் என நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் அடிக்கடி சுவாரசியமாக போஸ்டரை ஒட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் மற்றும்  பிரஷாந்த் கிஷோர் படங்கள் உள்ளன. 2026 ல் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய், 2026-ல் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என குறிப்பிட்டுள்ளனர் .

If he decides, he will be the Chief Minister .. Heat Vijay .. Vijay people's movement that hates Stalin. Viral poster

முடிவு எடுத்தால் முதல்வர்தான் என்றும்,  தற்போது திமுக தளபதி மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது, அதே 2026ல் தளபதி விஜய் தலைமையில் ஆட்சி நடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என போஸ்டர் அச்சிட்டிருப்பது திமுகவை சீண்டும் வகையில் உள்ளது,  இதை திமுகவினர் பலரும் விமர்சித்து வருகின்றனர் அடுத்த ஐந்து ஆண்டுகளும் திமுகவே ஆட்சியை கைப்பற்றும் என ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கூறிவரும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய்தான் என விஜய் மக்கள் இயக்கத்தினர் போஸ்டர் அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios