Asianet News TamilAsianet News Tamil

எங்களை தொட்டா தாங்க மாட்டீங்க... சீனாவுக்கு சூசக செய்தி சொன்ன ராஜ்நாத் சிங்..!

அடுத்த சில ஆண்டுகளில், உலகின் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடுகளில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் கால்பதிக்க இருப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

 

If Harmed, India Will not spare anyone Rajnath Singh Strong Message
Author
India, First Published Apr 16, 2022, 11:12 AM IST

பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இந்தியா யாரையும் விட்டுவைக்காது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வருகிறது. விரைவில் இந்தியா உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுப்பதை யாரும் தடுக்க முடியாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அரசு முறை பணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர் லடாக் எல்லையில்  சீன ராணுவத்தினருடனான மோதலின் போது இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி சூசகமாக தகவல் தெரிவித்தார். 

செய்தி அனுப்பப்பட்டது:

"அவர்கள் (இந்திய வீரர்கள்) என்ன செய்தார்கள், நாங்கள் (அரசு) என்ன முடிவு எடுத்தோம் என்ற விவரங்களை என்னால் வெளிப்படையாக கூற முடியாது, ஆனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால், யாரையும் இந்தியா விட்டு வைக்காது என்ற செய்தி (சீனாவுக்கு) மட்டும் சென்று இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும்," 

"இதைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், உலகின் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடுகளில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் கால்பதிக்க இருப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,"  என அவர் தெரிவித்தார். 

If Harmed, India Will not spare anyone Rajnath Singh Strong Message

இந்தியா அனுமதிக்காது:

"ஒரு நாட்டுடன் இந்தியா நல் உறவை வைத்திருந்தால், அது மற்ற நாட்டுடனான உறவை பாதிக்கும் என்று யாரும் கருதக் கூடாது. அது போன்ற தூதரக ரீதியான உறவை இந்தியா ஒரு போதும் தேர்வு செய்யாது,"  என ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். 

கிழக்கு லடாக் பகுதியில் மோதலை தவிர்க்க,  இந்தியாவும் சீனாவும் இதுவரை 15 சுற்று ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன. இந்த நிலையில் சீனா குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிஹ்டன் டி.சி.யில் நடைபெற்ற அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்கிருந்து ஹவாய் செல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங் IndoPACOM தலைமையகம் சென்றார். அதன்பின் சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவெளியினர் கலந்து கொண்டனர். இவர்களிடையே அமைச்சர் கலந்துரையாடினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios