Asianet News TamilAsianet News Tamil

கொலை வழக்கில் எடப்பாடியை கைது செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம்.. முன்னாள் நிர்வாகி பகீர் .

தமிழ்நாட்டில் ஒரே தேர்தல் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக இருவரும் பேசி வருகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். திமுக மீது ஒரே ஒரு விமர்சனம் தான் மக்களுக்கு உண்டு, அதாவது கொடநாடு கொலை வழக்கில் இன்னும் ஏன் எடப்பாடியை கைது செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் அது. அதை தவிர திமுகவை குறை சொல்ல ஒன்றுமில்லை.

If Edappadi is not arrested in the murder case, there will be a struggle all over Tamil Nadu .. Former executive shocking.
Author
Chennai, First Published Feb 16, 2022, 11:38 AM IST

கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு வைக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

அதிமுக செய்தி தொடர்பாளராக ஊடக விவாதங்களில்  அனல் பறக்கப் பேசி வந்தவர் பெங்களூரு புகழேந்தி, இவர் செல்வி ஜெயலலிதா இருந்தபோது பெங்களூரு அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது, இந்த தோல்விக்கு காரணம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தான் என்றும், அதனால்தான் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்தார். அவரின் இந்த பேச்சு பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஓபிஎஸ்சை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவருக்கு தென்மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்ற ரீதியில் விமர்சித்தார்.

If Edappadi is not arrested in the murder case, there will be a struggle all over Tamil Nadu .. Former executive shocking.

அப்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பெங்களூரு புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி வைக்கும் பாமக ஓ.பன்னீர் செல்வம் றித்து பேசுவதா? பாமக இல்லை என்றால் அதிமுக 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும், 23 இடங்களில் மெத்தம் 18 இடங்களில் தோல்வியடைந்ததை பற்றி பாமக முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என விமர்சித்திருந்தார். இந்நிலையில்தான் பெங்களூரு  புகழேந்தி அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பேசியதால் அவர் நீக்கப்பட்டார். தனக்காகத்தானே புகழேந்தி பேசியனார் என்ற கருணையை கூட ஒ.பன்னீர் செல்வம் புகமேந்திக்கு காட்டவில்லை. பாமகவை பகைத்துக் கொள்ள கூடாது என புகழேந்தியை கட்சியை விட்டே இபிஎஸ்- ஓபிஎஸ் தூக்கியெறிந்தனர். அதுமுதல் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகழைந்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில்தான்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்தித்த பெங்களூரு புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும்போது எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர்எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்துள்ளார். இதை அங்கிருந்த அமைச்சர்கள் யாரும் தடுக்கவில்லை. இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது, எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை பார்த்திருக்ககூட மாட்டார். எம்ஜிஆர் காலில் விழுந்திருக்க மாட்டார். அவர் சசிகலா காலில் விழுந்தவர்தான், இப்படிப்பட்ட நிலையில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுகிறார் என்றால் எம்ஜிஆர் எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்ததாக ஆகிறது, இதைதான் எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். அம்மாவாசையை சினிமாவில் தான் பார்த்து ரசித்து இருக்கிறோம், அதற்குப் பிறகு தற்போது பழனிச்சாமிக்கு அது பொருத்தமாக இருக்கிறது.

If Edappadi is not arrested in the murder case, there will be a struggle all over Tamil Nadu .. Former executive shocking.

தமிழ்நாட்டில் ஒரே தேர்தல் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக இருவரும் பேசி வருகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். திமுக மீது ஒரே ஒரு விமர்சனம் தான் மக்களுக்கு உண்டு, அதாவது கொடநாடு கொலை வழக்கில் இன்னும் ஏன் எடப்பாடியை கைது செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் அது. அதை தவிர திமுகவை குறை சொல்ல ஒன்றுமில்லை. தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்ற கூட்டம்தான் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டம், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றார் அதே போலதான் திமுகவும் வெற்றி பெறும். அதிமுக தான் இதற்கு முழு காரணமாகவும் இருக்கும். பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வரமாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி அடம்பிடிக்கிறார். இப்படி இருந்தால் மக்கள் எப்படி அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். மொத்தத்தில்  கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படவில்லை என்றால் என் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios