Asianet News TamilAsianet News Tamil

கஜினி முகமது போல கொரோனா திரும்பத் திரும்ப வந்தாலும் விடமாட்டோம்.. தில்லு காட்டும் ராதாகிருஷ்ணன்.

மருத்துவத்துவறையில் ஆசியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் திகழ்கிறது, திமுக ஆட்சி அமைந்த பிறகே இந்த உன்னத நிலை ஏற்பட்டுள்ளது.  கேட்கும் , பார்க்கும் , நுகரும் உணர்வுகள் மனிதனுக்கு அவசியம், 50 வயது கடந்தாலே செவித்திறன் குறைந்து விடுகிறது. எனது உதவியாளர் ஒருவருக்கு ,  காது மந்தமாக இருப்பதால் தினம்தோறும் திட்டு வாங்கி விடுவார். 

if corona will come again  and again Like Ghajini Mohammad,...  we will not let it , medical secretary says
Author
Chennai, First Published Mar 3, 2022, 12:50 PM IST

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறித்து முகவர்கள் மூலமாக விவரங்கள் சேகரிக்கப்படுகிறது என்றும், உக்ரைன் மாணவர்களை முழமையாக மீட்டு வந்த பிறகு ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கஜினி முகமது போல கொரோனா திரும்பத் திரும்ப வந்தாலும் தொடர்ந்து வெற்றி கொள்ளோம் என மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவித்திறன் நாள் குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. அதில் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2016 முதல் உலக காது கேட்கும் தினம் கொண்டாடப்படுகிறது. அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து இவ்விழாவை நடத்துகிறோம். விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் காது கேட்கும் திறன் குறித்து பலர் கவனம் செலுத்து வதில்லை அதற்கு நானும் ஒரு உதாரணம் என்றார். அமைச்சராவதற்கு முன் 3 மணி நேரம் மாரத்தான் ஓடுவேன். அப்போது முழு அளவு ஓசையில் பாடலை ஹெட்செட்டில் கேட்டபடி ஓடுவதுதான் எனது வழக்கம். ஏற்கனவே எனக்கு காதில் 2002 ல் அறுவை சிகிச்சை  மேற்கோண்டேன் என்றார். 

if corona will come again  and again Like Ghajini Mohammad,...  we will not let it , medical secretary says

துறையின் அமைச்சரான பிறகு , மருத்துவத்துறை குறித்து அதிகமாக படித்து தெரிந்து கொண்டதால் இப்போது அதிகமாக இரைச்சலாக நான் பாடல் கேட்பதில்லை. முதல்வர் இந்த துறையை எனக்கு ஒதுக்கியவுடன் சிலர் எனது செயல்பாடு எப்படியிருக்கும் என சந்தேகப்பட்டார்கள். சாதிக் பாட்சா , ஆற்காடு வீராசாமி ,  முத்துசாமி , பொன்முடி , எம்ஆர்கே பன்னீர் செல்வம் போன்ற மருத்துவர் அல்லாதவர்களும் இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இடையில் ஓரிருவர் மருத்துவராக இருந்ததால் மருத்துவராக இருந்தால் மட்டுமே சுகாதாரத்துறையில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி இருந்ததுதான் அதற்கு காரணம். 

முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் 1லட்சத்து 36ஆயிரத்து 20 பேருக்கு  காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் சாலை விபத்து மரணம் 1743 ஆக இருந்தது , இன்னுயிர் காப்போம் திட்டம் அமலானதின் காரணமாக  இந்த ஜனவரியில் சாலை விபத்து மரணம் 540 ஆக குறைந்துள்ளது. மூன்றில் ஒரு பங்காக மரணம் குறைந்துள்ளது. தொற்றா நோய்களால் ஆண்டுக்கு 5-6 லட்சம் பேர் மரணமடைகின்றனர். அதை கட்டுப்புடுத்தவே மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். 

கடந்த 2ஆண்டில் குறைந்தளவு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையாக  320 என்றளவில்  கொரோனா பதிப்பு எண்ணிக்கை நேற்று பதிவாகியுள்ளது. இதை ஜீரோ வாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்ற அவர், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 வாரமாக நடைபெறாமல் இருந்த மெகா தடுப்பூசி முகாம் இந்த சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில்,  23 வது முகாம் நடைபெறு கிறது. தமிழகத்தில் 2037 அரசு , தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வழங்கினர் , தற்போது 208 மருத்துவமனையில் மட்டுமே கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

if corona will come again  and again Like Ghajini Mohammad,...  we will not let it , medical secretary says

அமைச்சர் சேகர்பாபு மேடைப்  பேச்சு:- 

மருத்துவத்துவறையில் ஆசியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் திகழ்கிறது, திமுக ஆட்சி அமைந்த பிறகே இந்த உன்னத நிலை ஏற்பட்டுள்ளது. கேட்கும் , பார்க்கும் , நுகரும் உணர்வுகள் மனிதனுக்கு அவசியம், 50 வயது கடந்தாலே செவித்திறன் குறைந்து விடுகிறது. எனது உதவியாளர் ஒருவருக்கு ,  காது மந்தமாக இருப்பதால் தினம்தோறும் திட்டு வாங்கி விடுவார். செவித்திறனுக்கான பகுப்பாய்வு கூடம் , பரிசோதனை கூடம் குறித்து மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். நல்ல ஓவியர் கையில் உள்ள தூரிகை , வீரன் கையில் உள்ள வாள் , நல்ல மீட்பரின் கையில் உள்ள  இசைக்கருவி போல மருத்துவத் துறை மா.சுப்பிரமணியனிடம் இருக்கிறது என்றார். 

அதைத் தொடர்ந்து பேசிய மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், புதிய புதிய நோய்கள் காரணமாக சுகாதாரத்துறையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி மூலம் மூன்றாம் அலை குறைந்தது. 2 ஆண்டுகளாக மற்ற நோய்களையும் கட்டுப்படுத்தி உள்ளோம். செல்போன் , ஹெட்செட்களை எப்போதும் பலர் காதிலேயே வைத்துள்ளனர், அது செவித்திறனை பாதிக்கும். இந்தியாவிலேயே அனைவருக்குமான இலவச மருத்துவ  உரிமை தமிழகத்தில் மட்டுமே உள்ளது என்ற அவர், கஜினி முகமது போல் கொரோனா மீண்டும் மீண்டும் , வந்து  போனாலும் தொடர்ந்து நாம் வெற்றி பெற்று வருகிறோம் " என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios