Asianet News TamilAsianet News Tamil

பந்தாடப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... திமுக ஆட்சிக்கு வந்தது முதல் 27 பேர் மாற்றம்..!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

IAS officers to be played ... 27 people changed since DMK came to power ..!
Author
Tamil Nadu, First Published May 26, 2021, 5:55 PM IST

தமிழகத்தில் தற்போது 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.IAS officers to be played ... 27 people changed since DMK came to power ..!

முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது 6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள பணியிட ஆணைச் செய்தியில், ’’தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் பாசனம், விவசாயம் மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் நிர்வாக திட்ட இயக்குநராக இருந்த விபு நாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.IAS officers to be played ... 27 people changed since DMK came to power ..!

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை (பயிற்சி) இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை முதன்மைச் செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா, பாசனம், விவசாயம் மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் நிர்வாக திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

IAS officers to be played ... 27 people changed since DMK came to power ..!

சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநராக நியமனமிக்கப்படுகிறார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலராக இருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்’’எனக் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios