Asianet News TamilAsianet News Tamil

ஜெயிக்கலைனா நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்... பிரஷாந்த் கிஷோர் சபதம்..!

 ஐபேக்கையே விட்டு விடுகிறேன். நான் வேறு வேலைக்குச் செல்கிறேன், இந்த தேர்தல் உத்திவகுப்பு வேலையே வேண்டாம் என்று போய் விடுகிறேன்.

I will quit my job ... Prashant Kishore vows
Author
Tamil Nadu, First Published Mar 3, 2021, 4:31 PM IST

பாஜகவின் கூட்டங்களுக்கு 200-300 பேர் கூட வருவதில்லை. அமித் ஷா சத்தத்தினால் வெற்றி பெற்று விட முடியுமா? என தேர்தல் பிரச்சார வியூகர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசியல் வியூக நிபுனரும், ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர்  ’’மேற்கு வங்கத்தில் பாஜக 100 தொகுதிகளுக்கும் மேல் வென்றால் தான் தொழிலையே விட்டு விடுகிறேன். திரிணாமுல் ஆட்சியை அசைக்க முடியாது. வெறும் சத்தத்தை வைத்துக் கொண்டு பாஜக தேர்தலை வென்று விடலாம் என்று கனவு காண்கிறது. I will quit my job ... Prashant Kishore vows

பெங்காலில் பாஜக 100 சீட்களுக்கும் மேல் வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன். ஐபேக்கையே விட்டு விடுகிறேன். நான் வேறு வேலைக்குச் செல்கிறேன், இந்த தேர்தல் உத்திவகுப்பு வேலையே வேண்டாம் என்று போய் விடுகிறேன். பாஜக 100 சீட்களுக்கும் மேல் வென்றால் இந்த அரசியல் தொழிலையே விட்டு விடுகிறேன். உ.பி.யில் தோற்றோம். ஆனால் அங்கு நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் பெங்காலில் சாக்குப்போக்கே கிடையாது. தீதி எனக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். மேற்கு வங்கத் தேர்தலை இழந்தால் இந்த வேலைக்கு நான் தகுதியானவன் அல்ல என்று விலகி விடுகிறேன்.I will quit my job ... Prashant Kishore vows

திரிணாமுல் காங்கிரஸ் அதன் சுமையாலேயே வீழ்ந்தால்தான் பாஜக அங்கு வெல்ல முடியும். திரிணாமுலில் சில கோஷ்டி மோதல்கள் உள்ளன. அதை பாஜக நிச்சயம் குறிவைக்கும். இதில் பாஜக சிறப்பாகச் செயல்படும். நிறைய பேர் திரிணாமுல்லிலிருந்து பாஜகவுக்குத் தாவுகின்றனர் என்பது பாஜகவின் உத்தி. பிறக் கட்சி தலைவர்களைப்பிடித்துப் போடுவது, ஆசைவலை விரிப்பது அவர்களது உத்தி. பணம், டிக்கெட், பதவி, அதனால் வெளியேறுபவர்கள் குறித்து எந்த ஆச்சரியமும் இல்லை.

அவர்கள் வெளியேறுவதற்கு என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் நான் இங்கு நண்பர்களைச் சம்பாதிக்க வரவில்லை. கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இதற்காக நான் பணியாற்றும் போது சில கோஷ்டிகள் தங்களைப் புறக்கணிப்பதாக கருதும். இது தவிர்க்க முடியாதது. இது மறு ஒழுங்கமைப்பு வேலைதான். இடையூறு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. பாஜகவும் அமித் ஷாவும் 200 இடங்களில் வெல்வோம் என்கின்றனர். ஆனால் இது சும்மா திரிணாமுல் கட்சியினரிடம் பதற்றத்தை அதிகரிப்பதுதான், ஆனால் வெறும் காற்றையும் சப்தத்தையும் வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியுமா?I will quit my job ... Prashant Kishore vows

பாஜக போடும் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட தேறுவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் கூட்டம் வருகிறது. சுவேந்து அதிகாரியின் செல்வாக்கு கூடுதலாக ஊதிப்பெருக்கப்படுகிறது. நந்திகிராம் ஹீரோ என்பதுபோலும் நந்திகிராமை உருவாக்கியது ஏதோ இவர்தான் என்றும் மம்தா இல்லை என்றும் கருதுகிறார்கள். இப்போது நந்திகிராமில் தீதி போட்டியிடுகிறார். முடிந்தால் அதிகாரி ஜெயிக்கட்டும்’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios