சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

சென்னை லீலா பேலஸ் ஹேட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் நான் அரசியலுக்கு வருவேன். நான் வருங்கால முதல்வர் என கூறுவதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் தோற்கும். 

மேலும், ரஜினி முதலமைச்சர் இல்லை என பட்டி தொட்டியெங்கும் எழுச்சி ஏற்படுத்துங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன். 45 வயதுக்குள் இளைஞர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது. ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், ரஜினியின் பேச்சு அவர் தற்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.