I want to be my opponent I do not have that qualification Palanciya team is Balanthiya Dinakaran
கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்த தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என சீனிவாசன் கூறுகிறார். மருத்துவமனைக்கு ஆளுநர் சென்று பார்த்தார். பின்னர் ஜெயலலிதாவை பார்த்ததாக பேட்டியும் கொடுத்தார். அப்படியென்றால் ஆளுநர் பொய் கூறினாரா? என்று கேள்வி எழுப்பினார்.
சசிகலாவிடம் அவரை முதல்வராகுமாறு கூறியது இதே திண்டுக்கல் சீனிவாசன் தான் என தெரிவித்த தினகரன், பதவியை காப்பாற்றுவதற்காக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் எனவும் குனிந்து குனிந்தே முதுகு வளைந்தவர்கள் எனவும் தினகரன் விமர்சித்தார்.
அரசு சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அரசியல் பேசுவதாக தினகரன் குற்றம்சாட்டினார்.
எதிரியாக இருப்பதற்கு ஒரு தரம் வேண்டும். அந்த தரம் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லை. அதனால் அவர்களது கருத்துக்களுக்கு பதிலளித்து தனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என தினகரன் தெரிவித்தார்.
