திமுக தலைவர் கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், சோ போன்றோரிடம் அரசியல் கற்றவன் நான் என்றும், எனக்கா அரசியல் தெரியாதுன்னு சொல்றீங்க எனவும்  நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்தார்.

சென்னை  வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில்  அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்துப் பேசினார்.

அப்போது எனக்கு அரசியல் தெரியாது என்று பலர் கிண்டல் செய்கிறார்கள். பொதுக் கூட்டங்களில் பெரிய தலைவர்கள் கூட எனது அரசியல் பிரவேசம் குறித்து கேலி செய்கிறார்க்ள.

அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். பொதுக் கூட்டங்களில் மக்கள் முன்பு பேசும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும் என தெரிவித்தார்.

என்க்கும் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியும்' என்று கூறிய ரஜினிகாந்த், இந்த அரசியல் பாதை கல், முள் பாதை நிறைந்த பாதை தான், அது எனக்கு மிக நன்றாக தெரியும்.

ஏனென்றால்  நான்  கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அவர்கள்தான் எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தார்கள் என தெரிவித்தார்.