I just saw Jayalalithaa Cooker informs the Rajamalai inquiry commission

2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 2016ம் ஆண்டில் போயஸ்கார்டன் தோட்ட இல்லத்தில் பணியாற்றிய 31 பேரின் பட்டியலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வழங்கியிருந்தார். 

இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலராக பணியாற்றிய ராஜம்மாள் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் பேரில் சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் ராஜம்மாள் பிற்பகலில் ஆஜரானார். 

அப்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.