அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவொரு ஆலோசனையும், திட்டமிடலும் நடத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆலோசனை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி அவரது வீட்டில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மு.க.அழகிரி, ’’எனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவொரு ஆலோசனையும், திட்டமிடலும் நடத்தவில்லை. சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரப்பி வருகிறார்கள். நான் எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும், ஊடகங்களை அழைத்து தகவல் சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.