முக ஸ்டாலின் யார் என்றே தெரியாது, நான் எந்த பாராட்டுகளையும் தெரிவிக்கவில்லை என ஐநா சபையின் முன்னாள் துனை பொது செயலாளார் ஜேன் ஏலிசன் டீவிட்டரில் பதிலளித்துள்ளார்.  

நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர்,தொடர்ந்து 1 மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்தே பேசினார்.அவரின் நீண்டகால அரசியல் திட்டங்கள் குறித்த பேச்சுகளை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து,அதனை இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.இப்படிபட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்து இருந்தால் அவரை உலகமே தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும். (ஐநா மு. துணை பொது செயலாளர் ஜான் எலியாசன் எழுதிய நான் வியந்த உலக தலைவர்கள் புத்தகம்,பக் 372) எழுதியுள்ளதாக திமுக உடன் பிறப்புகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த பதிவை பார்க்கும் போதே, உடன் பிறப்புகள் பரப்பும் வதந்திகளில் இதுவும் ஒன்று என்பது, இது போட்டோ ஷாப் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இது அனைவருக்கும் பொய் என்பது எளிதில் புரிந்துவிடும். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்த ஒரு 'ட்விட்டர் வாசி' ஸார்; இது உண்மையா எனக் கேட்க. அதற்கு அவர்  அப்படி ஒரு மனிதரை பற்றி எனக்கு தெரியவே தெரியாது என்று நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி கேட்டுள்ளார்.

ஸ்டாலின், டி.ஆர் பாலு ஆகியோருடன் ஜான் எலியாசன் இருக்கும் புகைப்படம் போட்டோஷாப்பாக இருக்குமோ என்று சற்று தேடிப்பார்த்தால், அது டி.ஆர் பாலு அவர்களின் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிறப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படம் மீது சந்தேகம் வலுத்த நிலையில், மேலும் ஒரு ட்விட்டர் வாசி, ஜான் எலியாசன் அவர்களை டேக் செய்து, இந்த புகைப்படம் உண்மையா?  எனக் கேட்க அதற்கும் அசராமல், விளக்கமாக பதிலளித்துள்ளார். அதில்,“இவ்வாறு ஒரு சந்திப்பு நடந்தவாறு நினைவு இல்லை. என்னுடைய அலுவலகம் போன்று இருக்கும் பேக் கிரவுண்ட் உண்மை இல்லை. ஐ.நா வின் குறியீடு, வலது பக்கமே இருக்கும், இடது பக்கம் இருக்காது. புத்தக அலமாரி, இடது பக்கம் தான் இருக்கும்”, என்று அடுக்கடுக்கான உண்மைகளை முன் வைத்துள்ளார். இந்த நிலையில், டி.ஆர். பாலு அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் போலியானவை என்பது உறுதியாகியுள்ளது. 

ஸ்டாலினையும் திமுக மானத்தையும் வாங்க வெளியிலிருந்து ஒருவர் கழுவி ஊத்தவேண்டிய அவசியமே இல்லை, அவர்களே அதை செய்துகொள்வார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இனிமேலாவது உடன் பிறப்புகள் இணையத்தில் புருடாவை பரப்பாமல் இருப்பார்களா?  பொறுத்திருந்து பார்ப்போம்...