Asianet News TamilAsianet News Tamil

நானும் 10 வருஷம் அமைச்சரா இருந்திருக்கேன்... பேச விடுங்க குருவே... சிரிப்பலை மூட்டிய செல்லூர் ராஜூ..!

நானும் 10 வருடம் ஒரே துறையில் அமைச்சராக இருந்தேன். பேச நேரம் கொடுங்கள் குருவே என சபாநாயகர் அப்பாவுவிடம் செல்லூர் ராஜூ வேண்டியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. 

I have been a minister for 10 years too ... Let me talk, Guru ... Cellur Raju who stopped laughing
Author
Tamil Nadu, First Published Aug 25, 2021, 12:16 PM IST

நானும் 10 வருடம் ஒரே துறையில் அமைச்சராக இருந்தேன். பேச நேரம் கொடுங்கள் குருவே என சபாநாயகர் அப்பாவுவிடம் செல்லூர் ராஜூ வேண்டியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.

 I have been a minister for 10 years too ... Let me talk, Guru ... Cellur Raju who stopped laughing

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, ’’மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டுவதாக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் ராஜூ குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‛‛நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து. அந்த இடத்தில் பென்னிகுக் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்'' எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ’’பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து மாற்ற தயாராக இருக்கிறது. இரண்டு முறை அமைச்சராக இருந்து, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள செல்லூர் ராஜூ போன்ற மூத்த உறுப்பினர் எந்த ஆதாரமும் இல்லாமல் தவறான தகவலை அவையில் கூறக்கூடாது’’என கூறினார். I have been a minister for 10 years too ... Let me talk, Guru ... Cellur Raju who stopped laughing

கடந்த ஆட்சியில் பயிர்கடனில் முறைகேடு நடைபெற்றதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ’’பயிர்க்கடன்களில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை’’அப்போது வழிமறித்த சபாநாயகரிடம், ‘’நானும் 10 வருடம் ஒரே துறையில் அமைச்சராக இருந்தேன். பேச நேரம் கொடுங்கள் குருவே'’என சபாநாயகர் அப்பாவுவிடம் செல்லூர் ராஜூ வேண்டியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios