Asianet News TamilAsianet News Tamil

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை... அதனால் எனக்கு கவலையில்லை... நிதி அமைச்சர் அசால்டு பதில்..!!

 '' நான் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளவதில்லை,   அதைப் பயன்படுத்தாத குடும்பத்தைச் சேர்ந்தவர் நான்,   நான் வெங்காயம் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை வெங்காயத்துடன் அதிகம் சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன் ''  என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

i did not take  onion and garlic my family dose not take vegetable's so i don't bother  about onion price hoke - finance minister nirmala seetharaman
Author
Delhi, First Published Dec 5, 2019, 1:47 PM IST

சில்லறை விலைகள் உயர்ந்து வருவது குறித்து மக்களவையில் நடந்த விவாதத்தின்போது,  '' நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை அதனால் அது பற்றி எனக்கு கவலை இல்லை "  என நிர்மலா சீதாராமன் அலட்சியமாக பதில் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது .  அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது  இருபது ரூபாய் 25 ரூபாய் என விற்கப்பட்டு வந்த வெங்காயத்தின் விலை தற்போது பன்மடங்காக உயர்ந்து கிலோ 200  ரூபாயை எட்டியுள்ளது . 

i did not take  onion and garlic my family dose not take vegetable's so i don't bother  about onion price hoke - finance minister nirmala seetharaman

இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  போதிய விளைச்சல்  இன்மை,  மற்றும் தொடர் மழை காரணமாக வெங்காய உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால்  விலையேற்றம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது . இந்நிலையில் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்து வருகிறது. ஆனாலும் வெங்காயத்தில் விலை குறைந்தபாடில்லை.  இந்நிலையில் நாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது  குறித்து புதன்கிழமை பாராளுமன்றத்தில் வினோதமான கருத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறியுள்ளார் அது , '' நான் காய்கறிகளை அதிகம் உட்கொள்ளவதில்லை,   அதைப் பயன்படுத்தாத குடும்பத்தைச் சேர்ந்தவர் நான்,   நான் வெங்காயம் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை வெங்காயத்துடன் அதிகம் சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன் ''  என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 i did not take  onion and garlic my family dose not take vegetable's so i don't bother  about onion price hoke - finance minister nirmala seetharaman

வெங்காயத்தைப் பற்றி அவையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது  எதிர்க்கட்சிகள் குறுக்கிட்டதற்காக அவர் இவ்வாறு பதிலளித்தார். அதே நேரத்தில்  பல நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம்  வெங்காய தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாகவும் .  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் .  வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்றும்,  அவற்றை சேமித்து வைப்பதில் பல கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன என்றும், அதை  அரசு சரிசெய்யும்  எனவும் அவர் தெரிவித்தார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios