Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்கு சவால்விடுத்தேன், அவர் பயந்துவிட்டார். ராயபுரம் தொகுதியில் ரவுண்டுகட்டு அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக செய்ததை நாங்கள் அதை நினைவு படுத்தி கொண்டே இருப்போம் என்ற அவர், டிசம்பர் 6 வந்தால் திமுக ஆட்சியில் பயந்து தான் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் எனறார்.

I challenged Stalin and he was scared ... Minister Jayakumar
Author
Chennai, First Published Mar 19, 2021, 1:37 PM IST

சென்னை ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.அவரை வரும் வழியில் பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் பெண்கள் குழந்தைகள் என  அனைவரும் நடனமாடி உற்சாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராயபுரத்தின் திமுக வேட்பாளர் நீந்த தெரியாதவர் என்றும் நான் கடல், ஆறு, குளம் என அனைத்திலும் நீந்தி பழக்கப்பட்டவன், நீச்சல் பயிற்சி எடுத்து இருக்கிறேன் என்றார். இந்த தொகுதியில் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார். மேலும், ராயபுரம் மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் அதிமுக அரசு அமையும் என தெரிவித்தார். 

I challenged Stalin and he was scared ... Minister Jayakumar

தொடர்ந்து பேசிய அவர், என்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என்று ஸ்டாலினிடம் சவால் விட்டிருந்தேன். அவர் பயந்து இந்த தொகுதிக்கு வரவில்லை என்றார். இந்த தொகுதியில் திமுக சார்பில் சாதாரண தொண்டனை நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவார் என்று ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார். ஆனால் தற்போது பணம் படைத்தவரை இந்த தொகுதியில் திமுக நிறுத்தியுள்ளது என்றார். இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற அவர், கடந்த திமுக ஆட்சியில் சமுக நீதி பதிக்கப்பட்டது, இஸ்லாமியருக்கு பாதுகாப்பு இல்லமால் இருந்தது. இஸ்லாமிய மக்கள் அதை எல்லாம் மறக்க மாட்டார்கள் என்றார். 

I challenged Stalin and he was scared ... Minister Jayakumar

திமுக செய்ததை நாங்கள் அதை நினைவு படுத்தி கொண்டே இருப்போம் என்ற அவர், டிசம்பர் 6 வந்தால் திமுக ஆட்சியில் பயந்து தான் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் எனறார். திமுக ஆட்சியில் ஸ்டாலினால் மதுரைக்கு போக முடியாது, அதிமுக ஆட்சி வந்த பிறகு தான் அவர் மதுரைக்கு போகிறார் என கூறினார். மேலும், தமிழக மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். முன்னதாக ரிக் ஷா வில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் இஸ்லாமியர்  ஒருவருடன் இணைந்து மேளம் அடித்தபடி இஸ்லாமிய பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios