Asianet News TamilAsianet News Tamil

உங்களை நம்பித்தானே கைலாசா வாங்கினேன்.. டிமிக்கி கொடுக்கும் பக்தர்களால் கதறும் நித்தி..

அதில் கைலாச நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார் அவரது சிஸ்யைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார். தனது டுவிட்டர் பக்கத்திலும் நித்யானந்தா மீது அவர் குற்றம் சாட்டி இருந்தார், ஆனால் அந்த புகார் மீது இதுவரை வழக்கு பதியப்படவில்லை. இமெயில் மூலம் அனுப்பப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், நேரடியாக வந்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

I bought Kailasa believing in you .. Nithi screaming by the devotees who Complaint and escapeing ..
Author
Chennai, First Published Mar 26, 2022, 11:17 AM IST

நித்யானந்தாவை நம்பி கைலாசா சென்றவர்கள் அவர் மீது அடுத்தடுத்து புகார் கொடுத்து வருவதுடன், பலர் அங்கிருந்து வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நித்தியானந்தா தனக்கு கமிட்மென்ட் கொடுத்தவர்கள் அதை காப்பாற்ற வேண்டும் என தனது பக்தர்களை எச்சரித்து வீடியோ வெளியிட்டு புலம்பி வருகிறார்.  அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சகிதம் காவி உடையில் சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு நித்யானந்தா மீது எழுந்தது. அவர் குறித்து பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில்நாட்டை விட்டே வெளியேறிய அவர் புதிய ஆன்மீக தேசத்தை உருவாக்கி இருப்பதாகவும் அதற்கு கைலாசம் என்று பெயர் வைத்திர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் தினம் தினம் வீடியோ வெளியிட்டு வருகிறார் நித்தி, கைலாச நாட்டுக்கு என தனி ரிசர்வ் பேங்க், தனி கரன்சிகள் என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் நித்தி. கைலாசாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், விரும்புபவர்கள் மெயில் அனுப்புங்கள் எனக் கூறி வருகிறார்.

I bought Kailasa believing in you .. Nithi screaming by the devotees who Complaint and escapeing ..

கைலாச நாட்டில் சிஷ்யைகளுடன் வசித்து வருகிறார் அவர்,  இந்நிலையில் அவர் வெளியிட்டு வரும் ஒவ்வொரு வீடியோக்களும் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. அடிக்கடி மாறுவேடம் போட்டு கொண்டு தன்னை பராசக்தி, வெங்கடாஜலபதி என கூறிவரும் அவர் ஆட்சியாளர்களையும் விமர்சித்து வருகிறார். ஒரு நாட்டின் அதிபர் என தன்னை கூறிக்கொள்ளும் நித்தியானந்தா மீது சமீபகாலமாக ஏராளமான புகார்கள் வரத் தொடங்கியுள்ளது. கைலாசாவிலும் பாலியல் துன்புறுத்தல்களை நித்தி ஆரம்பித்து விட்டார் என்பதுதான் அது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் போலீசாருக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த அந்தப் பெண் பெயர் சாரக் லான்டரி, பிடதி போலீசாருக்கு இமெயில் மூலம் புகார் ஒன்று அனுப்பி இருந்தார்.

அதில் கைலாச நாட்டில் இருக்கும் நித்யானந்தா சாமியார் அவரது சிஸ்யைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார். தனது டுவிட்டர் பக்கத்திலும் நித்யானந்தா மீது அவர் குற்றம் சாட்டி இருந்தார், ஆனால் அந்த புகார் மீது இதுவரை வழக்கு பதியப்படவில்லை. இமெயில் மூலம் அனுப்பப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், நேரடியாக வந்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைலாசத்தில் இருந்து அவரது பக்தர்கள் அவரை விட்டு  வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தி வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பக்தர்கள் கொடுக்கும் கமிட்மென்ட்டில் மட்டுமே கைலாசம் எனும் கப்பல் இயங்கி வருகிறது என்றும், எவரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டேன், ஆனால் ஒருவர் கமிட்மெண்ட் கொடுத்து விட்டால் அதை நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பேன் எனக்கூறி  தான் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் நித்தி.

I bought Kailasa believing in you .. Nithi screaming by the devotees who Complaint and escapeing ..

அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது யாரிடமும் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் கமிட் செய்தார்கள் என்றால் அந்த integrityயை காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பேன், நான் தானே கமிட் செய்தேன் இப்போது அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  எனக் கூறினால் முடியாது, எத்தனை ஆண்டுகள் என்னுடன் இருந்தாலும் ஒரு சூழ்நிலையில் எப்படி முடிவெடுப்பேன் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது,  நீங்கள் மிகப் பெரிய தவறு என்று நினைக்கிற ஒரு சூழ்நிலையை மிக எளிமையாக தீர்த்து விடுவேன், மிகவும் சிறிய தவறு என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலையை ஆழ்ந்து புரியவைப்பேன் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் கொடுத்த கமிட்மென்ட் காப்பாற்றப்பட வேண்டும், அந்த கமிட்மெண்ட்டை வைத்து உங்கள் எல்லோருக்கும் உபயோகமான பல விஷயங்களை வைத்திருக்கிறேன்.

ஆக, உங்கள் எல்லோருடைய கமிட்மென்ட்டையும் வைத்துத்தான் இந்த கைலாசாவை கட்டியெழுப்பி இருக்கிறேன், ஆக கமிட்மென்ட்டை காப்பாற்றினால்தான் நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் நன்மை செய்து கொள்கிற இந்த கைலாய என்கிற கப்பல் பயணிக்கும். சிலநேரங்களில் நான் இயங்கும் தர்மம் உங்களுக்கு புரிவதில்லை, நான் இயங்கும் தர்மம் உங்களுக்கு புரிந்தால் உங்களுக்குள் இயங்கும் பரம்பொருள் பரமசிவம் இயங்கும் தர்மம் உங்களுக்கு புரியும். என அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios