கழக சட்ட விதிகளின்படி இன்றுவரை அதிமுக ஒங்கிணைப்பாளர் நான் தான்.. மாஸ் காட்டிய ஓபிஎஸ்.

பொதுக்குழுவை எதிர்ப்பதால் தான் ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில், கழக சட்ட விதிகளின்படி இன்றளவும் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ. பன்னீர்செல்வம் கூறி உள்ளார். 

 I am the coordinator of AIADMK till date according to the rules of party.. OPS guts.

பொதுக்குழுவை எதிர்ப்பதால் தான் ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில், கழக சட்ட விதிகளின்படி இன்றளவும் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ. பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இந்த இருவேறு கருத்துக்களால்  கட்சி தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலராக நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவால் அது தடைப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட  ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவமரியாதை செய்தனர், இதனால் கூட்டத்திலிருந்து அவர் ஆவேசமாக வெளிநடப்பு செய்தார்.

 I am the coordinator of AIADMK till date according to the rules of party.. OPS guts.

இதையடுத்து இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 11ஆம் தேதி  பொதுக்குழு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடிபழனிசாமி தரப்பினர் செய்து வருகின்றனர். இந்நிலையில்  பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார், அதில் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் செல்வத்திற்கு பதில் அறிக்கை  வெளியிட்டார் இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படி காட்சியில் மாறி மாறி இரு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சூழ்நிலையில்தான் பாஜக  குடியரசுத்தலைவர் பொதுவேட்பாளராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை பாஜக நிறுத்தியுள்ளது. அவர் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோர சென்னை வருகை தந்திருந்தார். இதற்கான நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது, அதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முர்முவை வரவேற்றனர் அதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வரவேற்பார். பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் ஒரே மேடையில் அமருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.

 I am the coordinator of AIADMK till date according to the rules of party.. OPS guts.

இதனால் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முர்முவுக்கு அதிமுக  முழு ஆதரவையும் தருகிறது, இந்தியாவின் தலைசிறந்த குடியரசுத் தலைவராக முர்மு இருப்பார் என்று நம்பிக்கை வைத்து அவரை வேட்பாளராக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பழங்குடியினர் சமூகத்திலிருந்து முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்காமல் சமூகநீதி திராவிட மாடல் என்று ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.

ஏற்கனவே பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த சங்மாவை பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த நிலையில் அப்போதும் காங்கிரஸ் திமுகவால் அவர்  தோற்க நேர்ந்தது, ஆனால் தற்போது திரௌபதி முர்முவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் முழுமனதாக ஆதரவு அளித்து அவரை வெற்றி பெறச் செய்வார்கள் எனக் கூறினார்.

 I am the coordinator of AIADMK till date according to the rules of party.. OPS guts.

அவர் பேசி முடித்த பின்னர் முர்மு அதற்கு நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் கூட்டம் கலைந்தது.  அதைத்தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் தனியாக முர்முவை மேடையில் சந்தித்து பொன்னாடை போர்த்தினார். அவருடன் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  அப்போது அவர் முர்முவுக்கு அதிமுக சார்பில் முழு ஆதரவு அளிக்கப்படும் என மேடையில் உரையாற்றினார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளே பேசிக்கொண்டிருந்தபோதே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  வெளியில் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய ஜெயகுமார் பாஜக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, இதை வரவேற்கிறோம்,

அவருக்கு அதிமுக முழு ஆதரவை வழங்கும் என்றார், அப்போது ஓ பன்னீர்செல்வம் மேடைக்கு வராதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முழு காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான். அதிமுக பொதுக்குழு வுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டு இருக்க வேண்டும், கட்சி முடிவை ஏற்காததால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.

 I am the coordinator of AIADMK till date according to the rules of party.. OPS guts.

பேசி முடித்துவிட்டு மேடையிலிருந்து இறங்கி வந்த ஓபிஎஸ்சும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் முர்முவுக்கு எங்களது இதயப்பூர்வமான ஆதரவை தெரிவித்து இருக்கிறோம் என்றார் அப்போது நீங்கள் எழுதும் கடிதம் செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறுகின்றனரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கழக சட்ட விதி முறைகளின்படி இதுவரை நான்தான் கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன் எனக் கூறினார். இவ்வாறு அதிமுக தலைவர்களுடன் முழுமையின் சந்திப்பு இன்று பரபர்பாக நடந்து முடிந்தது.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios