Asianet News TamilAsianet News Tamil

" நான் தமிழன்" .. நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் நெத்தியடி பதில்.

எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தை பெருமைப்படுத்தும் வகையில்  ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் அது குறித்து எழுப்பிய கேள்விக்கு " நான் ஒரு தமிழன்"  என்று அவர் பதில் அளித்துள்ளார். அவரின் இந்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  ராகுல் காந்தியின் இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. 
 

I am Tamil" .. Rahul Gandhi shook the parliament.
Author
Chennai, First Published Feb 3, 2022, 11:42 AM IST

எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தை பெருமைப்படுத்தும் வகையில்  ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் அது குறித்து எழுப்பிய கேள்விக்கு " நான் ஒரு தமிழன்"  என்று அவர் பதில் அளித்துள்ளார். அவரின் இந்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  ராகுல் காந்தியின் இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தமிழகத்திற்கு தனி கலாச்சாரம், பண்பாடு வரலாறு உள்ளது என மேற்கோள்காட்டி பேசியிருப்பது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் தன்னை ஒரு தமிழன் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது உலகமெல்லாம் பரவி கிடக்கும் தமிழர்களை உணர்ச்சி வயத்தில் ஆழ்த்தியுள்ளது. 

I am Tamil" .. Rahul Gandhi shook the parliament.

ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தாநேரு குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு என்பது நீண்ட நெடியது  என்றே சொல்லலாம். பெரியாருடன் கொள்கை ரீதியாக முரண்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டின் திராவிட இயக்க சித்தத்தின்படி அவர் பகுத்தறிவாளராகவே வாழ்ந்தார். இதனால் இயல்பாகவே தமிழ்நாட்டுக்கும் அவருக்குமான உறவு இயற்கை பூர்வமான உறவாகவே இந்தது. அவரைத் தொடர்ந்து அவரது மகள் இந்திரா காந்தி  பச்சைத்தமிழன் கர்மவீரர் காமராஜரிடம் அரசியல் பயின்றவர் ஆவார். அதி முதலே காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு என்பது வலுவாகவே இருந்தது. ராகுலின் தந்தை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  தன் இன்னுயிரை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரி நீத்தார். இதனால் நேரு குடும்பத்தில் ரத்த சரித்திர வரலாற்றிலும் தமிழ்நாட்டை ஒரு அங்கமாகி விட்டது. 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அவர்களை விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்த தடையுமில்லை என கூறி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது தமிழ்நாட்டில் இன்றளவும் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் இதேபோல கடந்த 2021 ம் ஆண்டு ஈரோடு அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகத்துக்கும் தனக்குமான உறவை வெளிப்படுத்தி பேசினார். அதில் நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன், நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும் மோடி அரசும் அவமதிப்பு செய்கிறது, இதை ஒருபோதும் ஏற்கமுடியாது. டெல்லியில் இருப்பவர்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை, மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தமிழில் பேசி ஏமாற்றுகிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில்தான் மீண்டும் அதே போன்ற ஒரு உணர்வை அவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்  போது ராகுல் காந்தி உரையாற்றினார்.

I am Tamil" .. Rahul Gandhi shook the parliament.

அப்போது நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் பாஜக ஆட்சி நடத்துவதாக குற்றம்சாட்டினார். மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்திய என்று அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது, நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்புதானே தவிர ராஜ்ஜியம் இல்லை என்றார். பரஸ்பர ஆலோசனை,  பேச்சுவார்த்தை, புரிந்துணர்வால் மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தமிழ் நாட்டிற்கும் கேரளாவுக்கும் தனி கலாச்சாரம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டை அடக்கி ஆள நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும் என குறிப்பிட்டார். பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் உரை முடித்துவிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விட்டு வெளியே வரும்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தமிழகத்தை அதிக முறை உச்சரித்தது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் ஒரு தமிழன் என்று அவர் பதில் அளித்தார். உத்திரபிரதேசம் குறித்து உங்கள் உரையில் ஏன் இடம்பெறவில்லை என்பது போல நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு  பதில் அளிக்க மறுத்து ராகுல், அங்கிருந்து வேகமாக சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி தன்னை தமிழன் என கூறியிருப்பது தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios