Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் இணையத் தயார்... மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி சவால்..!

பாஜகவில் இணையத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் மகன் உதயநிதி சவால் விட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

i am ready join bjp that is the punishment says udhayanidhi
Author
Tamil Nadu, First Published Jan 24, 2019, 6:09 PM IST

பாஜகவில் இணையத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் மகன் உதயநிதி சவால் விட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. i am ready join bjp that is the punishment says udhayanidhi

சமூகவலைதலங்களில் எழும் கடும் விமர்சனங்களுக்கு அவ்வப்போது சூடாக பதிலடி கொடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் அரசியலில் காலூன்றப் போவதாக வரும் செய்திகளால் எதிர்கட்சியினர் கடுமையாக தாக்கி வருகின்றனர். குறிப்பாக குடும்ப அரசியலை மையப்படுத்தி விமர்சிக்கப்பட்டு வருகிறார். 

 

இந்நிலையில், பாஜக இளைஞரணி தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிரியங்காகாந்தி காங்கிரசில் பதவி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ''திமுகவினர் ராகுல் காந்தியும், பிரியங்காவும், கனிமொழியும் பதவி பெறுவதை பற்றி பேசுவதே இல்லை. குடும்ப அரசியல் குறித்து திமுகவினர் பேசுவது இல்லை. அவர்களை தமிழிசையுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். தமிழிசை குடும்பம் மூலமாக இந்த நிலைக்கு வரவில்லை. அவர் 15 ஆண்டுகளாக  கஷ்டங்களை தாங்கியே இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். குடும்ப அரசியலால் முன்னேறவில்லை'' எனக் கூறி இருந்தார். 

 

மற்றொரு பதிவில், உதயநிதிக்கு திமுக முரசொலி அறக்கட்டளையில் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கான பணங்களை கட்டுப்படுத்தும் பதவி அது. இதையும் திமுகவினர் ஏற்றுக்கொள்வார்கள். உதயநிதியை, தமிழிசை, நிர்மலா சீதாராமனுடன் ஒப்பிட்டு பேசுவார்கள்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.  இதற்கு சூட்டோடு சூடாக பதிலளித்துள்ள உதயநிதி ''நான் முரசொலி அறக்கட்டளை பதவியில் இருப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா..? உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் சேர தயார்... அதுதான் எனக்கு அளிக்கப்பட கூடிய மோசமான தண்டனையாக இருக்கும்'' என்று நெத்தியடி பதிலை அளித்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios