ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கிறார் என்றும் இனிமேல்தான் ஆன்மீக அரசியலையே பார்க்கப் பேறீங்க என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைத்தார்.  இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கல்லூரி விழா என்று நினைத்தால் இது கட்சி மாநாடு போல உள்ளது என்று தனது மகிழ்ச்சியைத் தொடங்கினார்.

கல்லூரி விழா அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன், . ஆனால், பேசக்கூடிய சூழல் உள்ளது. எனவே, கொஞ்சமாக பேசி விடுகிறேன் என தனது பேச்சைத் தொடங்கினார். எனது அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை அதிகம் பேர் கூறிவருகின்றனர். அவர்களிடம் நான் வாழ்த்துக்களை எதிர்பார்க்கவில்லை, ஆனால் இழிவுபடுத்தாதீர்கள் என வயியுறுத்தினார்.

நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன், 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன் என அதிரடியாக தெரிவித்தார்..

அரசியல் பாதை எனக்கும் தெரியும் அது  பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை அது தெரிந்துதான் நான் அரசியலில் இறங்கியுள்ளேன் என கூறினார்.

தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி என மாபெரும் தலைவர்கள் இல்லாத இந்த சூழலில் தமிழகத்திற்கு தலைமை தேவைப்படுகிறது அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் அரசியலுக்கு வந்திருப்பதாகவும் ரஜினி விளக்கம் அளித்தார்.

அரசியலில் யாரும் எம்ஜிஆர் ஆகமுடியாது என அதிமுகவினர் கேலி செய்து வருகிறார்கள். உண்மையதான்  நான் எம்ஜிஆர் ஆக முடியாது ஆனால்  எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும் என அதிரடி கிளப்பினார்.

இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள் நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான். என்று ரஜினி பேச ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.