I am also a Pachai Diravidan.told pon.radhakrishnan
திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என தொடர்ந்து பாஜக கூறிவரும் நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும் நானும் ஒரு பச்சைத் திராவிடன்தான் என திடீர் ஜகா வாங்கியுள்ளார்.
தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் மூண்டுள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்,ராஜா போன்றோர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக கடலுரில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட இயக்கங்களை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாத என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அட களவாணிப் பசங்களா, புறம்போக்குகளா, நீங்கள் தமிழக மண்ணில் மேடைபோட்டு தைரியமாக பேசும் உரிமையைப் பெற்றுத் தந்தது இந்த திராவிட இயக்கங்கள் தான் என்றும் இனிமேல் திராவிட இயக்கங்களை அழிப்போம் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என ஒரு போதும் சொல்லவில்லை என்றும், நானும் ஒரு பச்சைத் திராவிடன்தான் எனவும் கூறினார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் எதிர்வினைகளையும் தாம் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
