வரதட்சணை கொடுக்காததாலும், பெண் குழந்தை பெற்றெடுத்த காரணத்தாலும், தன் மனைவி மீது ஆசிட்-ஐ கணவன் வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக இருப்பவர் கோமல். இவர் தனது தாயாருடன் உத்தரபிரதேசதில் வசித்து வருகிறார். வரதட்சணைக் கேட்டு தனது கணவர் கபில் குமார் கொடுமைப்படுத்தயிதாக தெரிகிறது. 

இந்த நிலையில், கபில் குமார், உத்தரபிரதேசத்தில் உள்ள மனைவியை பார்க்க வந்துள்ளார். அப்போது அவர் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென தான் கொண்டு வந்த அமிலத்தை மனைவி மீது எறிந்துள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட கோமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுவது என்னவென்றால், கடந்த 2013 ஆம ஆண்டு முதல் கணவரிடம் வரதட்சணைக் கொடுமை அனுபவித்து வந்த கோமல், கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் குழந்தை பெற்றெடுத்ததால் பிரச்சனை பெரிதாக, தனது கணவரை பிரிந்து தன் தாயாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில்தான், கோமலை, அவரது கணவர் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கோமலின் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனைவி மீது ஆசிட் வீச்சு தொடர்பாக கோமல் கொடுத்த புகாரின் அடிப்படையில், கபில் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கபில் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.