Human rights commission notice to Yogi govt 9 times
யோகி ஆதித்யநாத் உ.பி. முதலமைச்சராக பதவியேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , அவரது அரசு மீது மனித உரிமை ஆணையம் 9 மனித உரிமை மீறல் நோட்டீசுகளை அனுப்பியுள்ள சம்பவம் பா.ஜ.க. அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.அவர் முதலமைச்சராக பதவியேற்று 10 மாதங்கள் ஆகியுள்ளது.

9 நோட்டீஸ்கள்
இந்நிலையில் அவரது அரசு மீது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் 9 நோட்டீசுகளை அனுப்பியுள்ளது.
போலீஸ் விசாரணை என்ற பெயரில் ஆப்பிரிக்க நாட்டினர் சித்தரவதை செய்யப்பட்டது, கோரக்பூர் மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், போலி என்கவுண்டர் விவகாரம், ரேபரேலியில் பாய்லர் வெடித்து 34 பேர் உயிரிழந்த சம்பவம், முதலமைச்சரே போலி என்கவுண்டர் சம்பவங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகார் உள்ளிட்ட விவகாரங்களில் தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த 10 மாதங்களில் உ.பி. அரசுக்கு எதிராக 9 நோட்டீசுகளை அனுப்பியுள்ளது.

டாக்டரே இன்றி வேலைக்காரரே மருத்துவமையத்தை நடத்திய சம்பவம் தொடர்பாகவும் மனித உரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் உ .பி. அரசுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த மனித உரிமை மீறல் நோட்டீசுகளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவருவதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி் குற்றம் சாட்டியுள்ளது.

புதிய சிக்கல்
அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜூகடி சிங், இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அடிமட்ட ஊழியர்களை இடைநீக்கம் செய்வதோடு இப்பி்ரச்சனைகள் முடிக்கப்பட்டுள்ளன. பெயரளவுக்கு மட்டுமே விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன., இந்த விவகாரங்களில் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
இவ்வாறு புகார் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் உ.பி. முதலமைச்சராக பதவியேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , அவரது அரசு மீது மனித உரிமை ஆணையம் 9 மனித உரிமை மீறல் நோட்டீசுகளை அனுப்பியுள்ள சம்பவம் பா.ஜ.க. அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
