கொரோனா தொற்றால் வறுமையில் வாடிக்கிடந்த ஏழை மக்களுக்கு தனது படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூ.5 லட்சம் ரூபாயை செலவழித்த மதுரை மாணவி நேத்ராவை ஐநா நல்லெண்ணத் தூதராக தேர்வு செய்துள்ளது.

மதுரையில் மேலமடையில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கினார். தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை எடுத்து செலவிட்டதால் பரபரப்பாக பேசப்பட்டார். 

நேத்ரா மற்றும் மோகனின் செயலைப்பாராட்டி மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி. அடுத்து அவர்களை பாஜகவில் இணையச் சொல்லி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. ஆனால், மோகன் கட்சியில் இணைய மறுத்து விட்டார்.

 

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.