உலக மீனவர் தின நல்வாழ்த்துக்கள். மீனவர்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. மீனவர்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு வசதிகளை நேரடியாக பெற வேண்டும் என்பதற்காகவும் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் பல்வேறு திட்டங்களை அரசு தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறது.

நீண்ட சட்டப்போரட்டத்திற்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு உறுதி அளித்துள்ளது. தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. அந்த வகையில் தேர்தல் நடப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு போகாத ஊருக்கு வழி சொல்லுவது போல் மேயர் தேர்தல் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் செல்வாக்கு இருந்தால் போட்டியிட வேண்டியது தானே.  கவுன்சிலர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது மறைமுக தேர்தலை தான் நடத்தியுள்ளனர். மாமியாருக்கு ஒரு சட்டம் மருமகளுக்கு ஒரு சட்டமா? சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதில் தவறில்லை. தமிழகத்தில் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற வேண்டும். 

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது பல வன்முறை சம்பவங்கள் தேர்தல் நடைபெற்ற போது நடந்துள்ளது. அதிமுகவுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. உள்ளாட்சி தேர்தல் நல்ல முறையில் நடைபெற அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. எதிர்கட்சிகள் ஒன்றுகூடி தேர்தல் நடத்தக்கூடாது என நினைக்கின்றனர். ஆனால் எங்களை பொறுத்தவரையில் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடரும். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் திமுக வேடிக்கை பார்த்தது போன்று அதிமுக வேடிக்கை பார்க்காது