திமுக ஊடக பேச்சாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி எனக் கூறிக்கொண்டு தனக்கு பல பெண்கள் போன் செய்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதிர வைத்துள்ளார். 

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த 13ம் தேதி திமுக ஊடக பேச்சாளர் தமிழன் பிரசன்னாவின் தொலைபேசி எண்ணை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தினார். “யாரோ தமிழன் பிரசன்னாவாம். மாண்புமிகு பிரதமர் அவர்களை அடிக்கடி இழிவாக பேசும் பழக்கம் உள்ள நபர் என்று கேள்வி. 9566111414 அவரது நம்பர் என்கிறார்கள்”என்று பதிவிட்டு இருந்தார்.

 அதற்கு பதிலடி கொடுத்த பிரசன்னா, “எனக்குப் புதிதாக வேலை செய்ய பாஜக-வின் தேசியச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் திரு.எச்.ராஜா அவர்களை புதிய PROவாக நியமித்து இருக்கின்றேன். அதனால் மக்கள் என்னிடத்தில் பேச அவர் எனது தொலைப்பேசி எண்ணை அவரின் முநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜகவில் இருக்கும் எனது தீவிர ரசிகர்கள் தொடர்ந்து எனது தொலைப்பேசிக்கு அழைப்பு விடுக்கின்றனர். ‘ஒன்றிணைவோம் வா'  நிகழ்ச்சியில் நான் மக்கள் பணியாற்றுவதால் எனக்கு வரும் அழைப்புகளை என்னுடைய புதிய PRO எச்.ராஜா அவர்கள் எடுத்துப் பேசுவார். அதக்றாக எனது அழைப்புகளை நான் அவரின் எண்ணுக்கு ‘Call Forward'செய்துள்ளேன். நன்றாக அழைத்துப் பேசுங்கள். நிறைய அழைப்பு கொடுக்குமாறு நான் பாஜக, ஆர்எஸ்எஸ் சங்கிகளை கேட்டுக் கொள்கின்றேன்,” என பதிலடி கொடுத்து இருந்தார்.  

இந்நிலையில் தமிழன் பிரசன்னாவுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலை கழக தலைவர் சு.ப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில்  “தன்வினை தன்னைச் சுடும்,” என்று கருத்திட்டு எச்.ராஜாவை மேலும் கிண்டலடித்து இருந்தார்.

 

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’யார்வினை யாரைச் சுட்டது. 4 நாட்கள் முன் 9003198030 லிருந்து என்னங்க எங்க இருக்கீங்கனு ஓர் அழைப்பு. நான் நீங்க யார் என்றதும் அப்பெண்மணி நான் த.பி மனைவி என்றார். நான் விவரம் செல்லி துண்டித்தேன். இரண்டு மணி கழித்து 9094532066 லிருந்து மீண்டும் என்னங்க அழைப்பு. வேறொரு பெண் த.பி மனைவியாம்’’எனத் தெரிவித்துள்ளார். அதாவது தனது நம்பரை கொடுத்ததால் தமிழன் பிரசன்னாவின் மனைவிகள் எனக் கூறிக் கொண்டு பலரும் போன் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.