Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா வீட்டில் இத்தனை கிலோ தங்கம்- வெள்ளிப்பொருட்களா..? அரசிதழில் வெளியான அதிரடி பட்டியல்..!

 டிவிகள் - 11, பிரிட்ஜ்கள் - 10 ஏசி.,கள் - 38, பர்னிச்சர் பொருட்கள் - 556, துணிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், செருப்புகள் உள்ளிட்டடை - 10,438,

How many kilos of gold and silver items in Jayalalitha is house? Action list published in the Gazette
Author
Tamil Nadu, First Published Jul 29, 2020, 10:34 AM IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அவர் வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும்- அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளது. How many kilos of gold and silver items in Jayalalitha is house? Action list published in the Gazette

'வேதா நிலையம்' வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டு அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெயலலிதா வீட்டை தமிழக அரசு மீட்டெடுத்தது. இதுகுறித்த அரசிதழில் வீட்டில் உள்ள அசையும் - அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 32,721 பொருட்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  4 கிலோ 372 கிராம் தங்கம் பொருட்கள் - 14,  601 கிலோ 424 கிராம் வெள்ளிப் பொருட்கள் - 867,  டிவிகள் - 11, பிரிட்ஜ்கள் - 10, ஏசி.,கள் - 38, பர்னிச்சர் பொருட்கள் - 556, துணிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், செருப்புகள் உள்ளிட்டடை - 10,438, தொலைபேசி / மொபைல்போன் - 29, புத்தகங்கள் - 8,376, ஸ்டேசனரி பொருட்கள் - 253, சூட்கேஸ்கள் - 65, கடிகாரங்கள் - 6, ஜெராக்ஸ் மிஷின் - 1, லேசர் பிரிண்டர் - 1 உள்ளிட்ட பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios