Asianet News TamilAsianet News Tamil

இத்தனை இலவசங்களா..? இவ்வளவு பணமா..? சலுகைகளை வாரி வாரி வழங்கி கில்லி அடித்த எடப்பாடி..!

கொரோனா பரவி வரும் நிலையில், பல்வேறு சலுகைகளை அறிவித்து மக்களின் அச்சத்தை போக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 

How free are you? So much money? Offers for edappadi anouncement
Author
Tamil Nadu, First Published Mar 24, 2020, 11:16 AM IST

கொரோனா பரவி வரும் நிலையில், பல்வேறு சலுகைகளை அறிவித்து மக்களின் அச்சத்தை போக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.How free are you? So much money? Offers for edappadi anouncement

இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும். மார்ச் மாதம் பொருட்கள் வாங்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதத்தில் பெற்று கொள்ள அனுமதிக்கப்படும். ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் தரப்படும். ஆதரவற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்று உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும்.How free are you? So much money? Offers for edappadi anouncement

அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள பிறமாநில அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும். அம்மா உணவகத்தில் சுகாதாரமானமுறையில் உணவு பொருட்கள் சமைத்து வழங்கப்படும். How free are you? So much money? Offers for edappadi anouncement

 நடைபாதை வியாபாரிகளுக்கு 3,250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கட்டட & ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதார்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருந்தால் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்ந்து வாங்கி கொள்ளலாம். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும், இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும். பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும்’’ என அவர் அறிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios