Asianet News TamilAsianet News Tamil

இந்த தோல்விகளை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ..? நூலிழையில் பறிபோன வெற்றி வாய்ப்பு..!

தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தியாகராய நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி 137 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

How do you accept all these failures ..? Chance of success in the prelims ..!
Author
Tamil Nadu, First Published May 3, 2021, 12:10 PM IST

தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தியாகராய நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி 137 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 56,035. அவரை எதிர்த்து நின்ற தி.நகர் சத்யா பெற்ற வாக்குகள் 55,898.How do you accept all these failures ..? Chance of success in the prelims ..!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில், பாஜக வேட்பாளர் சரஸ்வதி, திமுக வேட்பாளரான சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக 281 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 How do you accept all these failures ..? Chance of success in the prelims ..!

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் 88,945 வாக்குகள் பெற்றார்.  மேட்டூர் திகுதியில் பாமக வேட்பாளர் சதாசிவம் 656 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த சீனிவாசன் 96,399 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

How do you accept all these failures ..? Chance of success in the prelims ..!

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை இறுதிவரை தண்ணீர் குடிக்க வைத்தார் அதிமுக வேட்பாளரான ராமு. அதிமுக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிச் சுற்றில் 746 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார் துரைமுருகன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios