வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பெண்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இஸ்லாமிய சகோக்கள் என்ற போர்வையில்  ஒரு கட்சியை சேர்ந்தவர்களாக கூறப்படும் ஆண்கள் ஒரு பகுதியினர் காவலர்களிடம் தள்ளுமுள்ளு செய்தனர். அப்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

வன்முறை நிகழாமல் இருக்க அதன் பிறகே காவதுறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கைது செய்தனர். இந்த தாக்குதலின் போது இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக போலி தகவல் பரப்பப்பட்டது. ஆனால், அவர் இயற்கை மரணம் அடைந்தார். இந்தக் கலவரத்திற்கு அவரது மரணத்திற்கும் சம்பந்தமில்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். கலவரம் எப்படி நடைபெற்றது என்பதற்கான வீடியோ ஆதாரம் இது.