நண்பர் வீட்டுக்கு தப்ப முயன்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதுதான் போலீசில் அவர் சிக்கியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் ஹசன் சாலையில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தில் ஏற முயன்ற ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் திடீரென மடக்கி பிடித்து கைது செய்தனர். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மதுரை சரக டி.ஐ.ஜி காம்னி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்ட அவர் பாதுகாப்பு நிர்வாக காரணங்களுக்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி எப்படி சிக்கினார் என்கிற விவரம் தெரிய வந்துள்ளது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா எல்லை பகுதியில் அடர்ந்த மலைச்சார்ந்த கிராம பகுதிகளை தேர்ந்தெடுத்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் சுங்கசாவடியில் போலீசார் பிடித்து விடுவார்கள் என நினைத்த அவர் அந்த சாலைகளை தவிர்த்து விட்டு கிராமங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள ரோடுகளை அவர் தேர்ந்தெடுத்தார்.

இந்த வழியாக அவர் காரில் சுற்றிக்கொண்டு தலைமறைவாக திரிந்தார். இந்த சூழ்நிலையில் தான் அவர் ஓசூர் மற்றும் கர்நாடகா பகுதிகளில் காரில் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போலீசார் கர்நாடகா போலீசாரின் உதவியை நாடி ராஜேந்திர பாலாஜியை பிடிக்க புது வியூகம் அமைத்தனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடும் முயற்சியை தீவிரப்படுத்தினார்கள். இதையறிந்த ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து கர்நாடகா சென்றார். அவரது செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசார் அவர் கர்நாடகத்துக்குள் நுழைந்தததை உறுதி செய்தனர். ஆனால் அவரது செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவரை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வெள்ளை நிற காரில் பயணம் செய்தார். அவர் சென்ற காரின் பின்புற சக்கரத்தில் இருந்த வெள்ளை நிற பிளேட் மாயமாகி இருந்தது. இதனை அவர் கவனிக்கவில்லை. ஹசன் மாவட்டம் சைகிலேஷ்பூர் பகுதியில் கார் சென்ற போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ராஜேந்திர பாலாஜி சென்ற காரின் பின்புற சக்கரத்தில் இருந்த வெள்ளை நிற பிளேட் மாயமானதை பார்த்தனர். உடனே அந்த காரை போலீசார் நிறுத்தினார்கள். அப்போதுதான் அந்த காரில் ராஜேந்திர பாலாஜி இருந்தது தெரிய வந்தது. அவர் நண்பர் வீட்டுக்கு தப்ப முயன்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதுதான் போலீசில் அவர் சிக்கியுள்ளார்.