Asianet News TamilAsianet News Tamil

வாய்ப்பே இல்லை என்றபோதும் மு.க.ஸ்டாலின் முதல்வரானது எப்படி..? வெளிவந்த உண்மை..!

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனது அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் உருக்கமான வேண்டுதல் தான் காரணம் என மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

How can MK Stalin be the first when there is no chance ..? The truth that came out ..!
Author
Tamil Nadu, First Published May 11, 2021, 11:53 AM IST

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனது அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் உருக்கமான வேண்டுதல் தான் காரணம் என மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், ’’உருகும் பக்தி உயர்வைத் தரும்! பக்தி யாரிடம் உணர்வுப்பூர்வமாக இருக்கிறதோ அவர்களுக்கு கடவுள் கருணை புரிவான் என்பதற்கு ஸ்டாலினின் பதவி ஏற்பு நிதர்சனம். முதலமைச்சர் என்ற பதவி ஸ்டாலினின் ஜாதகத்தில் இல்லை என்று அடித்து சொல்லியவர்கள் பலர். ஆனால், அனைத்தையும் கடந்து எப்படி முதல்வர் ஆனார்?

How can MK Stalin be the first when there is no chance ..? The truth that came out ..!

ஒருமுறை பகவான் கிருஷ்ணரிடம், பக்தர் ஒருவர் ஜோதிடம் உண்மையா? என்று கேட்க, கிருஷ்ணர் அதில் என்ன சந்தேகம் என்றார். அப்படி என்றால், ஜோதிடர் சொல்லும் அனைத்தும் அப்படியே நடப்பதில்லையே ஏன்? என்று ஆர்வத்தோடு கேட்டாராம் பக்தர். ஜோதிடர் சொல்லியதெல்லாம் நடந்துவிட்டால் நான் எதற்கு என்றாராம் கிருஷ்ணர். இறைவனே மிகப் பெரியவன் என்று உணர்ந்து, தெளிந்தாராம் பக்தர்.How can MK Stalin be the first when there is no chance ..? The truth that came out ..!

அம்மாவின் மறைவிற்குப் பிறகு நான் நிறைய கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய கோயில்களில் உள்ளன்போடு வந்து பூஜை செய்கிறார் துர்கா அம்மா என்றார்கள் குருக்கள். அதில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பைரவரும் உண்டு. காசி கால பைரவரும் உண்டு. அப்படி தன் கணவனை முதல்வராக்கியே தீருவேன் என்று அவர் முறையிட்டது மனிதரிடம் இல்லை, கடவுளிடம்! பக்தையின் பக்தியில் உருகிய கடவுள் இன்று அவர் கனவை நிறைவேற்றித் தந்து இருக்கிறார்.How can MK Stalin be the first when there is no chance ..? The truth that came out ..!

நான் பலரிடம் அவர் முதல்வரானால் அதற்கு மனைவியின் பக்திதான் காரணமாக இருக்கும் என்று சொல்லி வந்தேன். இன்று பக்தி ஜெயம் கண்டது. கணவன் பக்தி, கடவுள் பக்தி இரண்டுமே சேர்ந்து  வெற்றி விழா பூண்டிருக்கிறது. பதவியேற்பு விழாவில் இறைவனை நினைத்து அவர் உருகியது, என்னையும் உருக வைத்தது. மனம் உருகும் பக்தி..! கொண்டவரை உயர்த்தும். எனவே, மனம் உருகிப் பக்தி செய்யுங்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios