சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தற்போது இத்தாலியில்  கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 576ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.  இதையடுத்து  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 138ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை 6 மணி முதல் 31 ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் வீட்டில் ஓய்வெடுக்கப்போகிறீர்களா? இல்லை சுடுகாட்டில் ரெஸ்ட் எடுக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில் என்கிற வாசகமிட்டு வைரலாகி வருகிறது.