இப்பவே குறிச்சு வச்சுக்கோங்க.. இந்து பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது.. திமுகவை பங்கம் செய்த அர்ஜுன் சம்பத்

‘ஒமைக்ரானை காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பார்கள்’ என்று திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அர்ஜுன் சம்பத்.

Hindu makkal katchi leader arjun sampath about dmk govt holidays and seeman vs dmk issue support ntk party

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அர்ஜின் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்வோம். தமிழக அரசு தை ஒன்று அன்று பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் தை ஒன்று புத்தாண்டு என அறிவித்தார்கள். மீண்டும் அதிமுக சித்திரையை அறிவித்தது. தற்போது மீண்டும் திமுக தை என மாற்ற முயற்சிக்கின்றனர். நமது பாரம்பரியம் சித்திரை மாதம் தான் புத்தாண்டு.

Hindu makkal katchi leader arjun sampath about dmk govt holidays and seeman vs dmk issue support ntk party

இந்துக்களின் கடவுள்களை துவேசம் செய்து பெண் அடிமை என முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்த ஈவேராவின் சிந்தனைகளை கொளுத்தி போகி கொண்டாட வேண்டும். ஒமைக்ரானை காரணம் காட்டி இந்து பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். கிருஸ்துமஸ் பண்டிகை என சொல்லாமல் அரையாண்டு விடுமுறை என விடுமுறை அறிவித்துள்ளார்கள்.இதை குறித்து கொள்ளுங்கள்.

திமுக தலைவராக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லத் தேவையில்லை. முதல்வராக நிச்சயமாக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். பிரதமரின் வருகை தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறது. அவரின் வருகையை தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது.

Hindu makkal katchi leader arjun sampath about dmk govt holidays and seeman vs dmk issue support ntk party

சுதந்திர தினத்தின் மஹோத்சவத்தை அந்தமானில் இந்து மக்கள் கட்சி நடத்த உள்ளது. கோவை மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு பெற்றுள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என லாட்டரி மார்டின், காருண்யா உள்ளிட்டோருடன் கூட்டணி வைத்து செந்தில் பாலாஜியை களமிறக்கி உள்ளது. பாசிச திமுக குறித்து நாம் தமிழர் உணர வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு இந்த விஷயத்தில் உறுதுணையாக இருப்போம்’ என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios