ராக்கிங் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுய்வதோடு நன்னன்டத்தை சான்றிதழில் கரும்புள்ளி வைக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,  அண்ணா பல்கலைக் கழகம்  மற்றும் இதரப் பல்ககளைக் கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ளது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ராக்கிங் குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ராக்கிங்கில் ஈடு ப்பட்டவர்கள் மீது காவல்துறை உதவியோடு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிடிருக்கிறது. இது இனியும் தொடரும் என கூறினார்.

இதுமட்டுமின்றி இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ராக்கிங் தடுப்புக் குழு என ஒரு புதிய குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும், ராக்கிங் தடுப்புக் குழு இல்லாத  கல்லூரிகளிலும் இந்தக் குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் SC/ST மாணவர்களுக்கு எந்தவித ஊக்கத்தொகை குறைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.