முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பல் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பரிசோதித்த மருத்துவர் அவரை ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் தனது வேலைகளில் பிஸியாக இருந்த முதல்வர் அதுபற்றி மறந்தே விட்டார். இந்நிலையில் சில மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு தூங்குவதற்கு சென்றவர் சற்று சோர்வாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து தான் அவர் ரத்த அழுத்தத்தை சோதிக்க செய்துகொள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை மட்டுமின்றி, முழு உடல் பரிசோதனையும் நடந்திருக்கிறது. அதில் அவரது இதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் பல் மருத்துவர் கூறியபடி ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஹை பிரஷரை சமாளிக்க தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி மாத்திரை கொடுத்து இருக்கிறார்கள்.