Asianet News TamilAsianet News Tamil

கடுங் குளிரில் நடுங்கும் ஊட்டி...!! மீண்டும் மிரட்டுகிறது மழை...!!

ரோஜா பூங்கா, படகு  இல்லம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினர். அடாது மழை விடாது பெய்து வருவதால் ஊட்டியில் இப்போது கடும் குளிர் வாட்டி வருகிறது.
 

heavy rain in ooty and cool and cool climate
Author
Ooty, First Published Oct 2, 2019, 8:14 AM IST

ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  அங்கங்கே  மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதுடன், அங்கு கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

heavy rain in ooty and cool and cool climate

நீலகிரியில் கடந்த ஒரு வார காலமாக பரவலான மழை பெய்து வருகிறது, மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கிய இரவு முழுவதும் கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் பெய்யும்  மழை காரணமாக ஊட்டியில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பயங்கர இடி மின்னல் காரணமாக அங்கு ஏராளமான தொலைக்காட்சி பெட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் குந்தா பாலத்தில் மண்சரிவு ஏற்பட்டு அப் பகுதியில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. heavy rain in ooty and cool and cool climate

ஊட்டியில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  ஊட்டி பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் குன்னூர்  சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, மஞ்சூர் பிரதானசாலை, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது இதனால் மணி நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது. 

heavy rain in ooty and cool and cool climate

தொடர் மழையின் காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு  இல்லம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினர். அடாது மழை விடாது பெய்து வருவதால் ஊட்டியில் இப்போது கடும் குளிர் வாட்டி வருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios