Asianet News TamilAsianet News Tamil

இதயத்தில் அடைப்பா ? கவலைப் படாதீங்க ! இத சாப்பிடுங்க எல்லாம் சரியாயிடும் !!

ஹார்ட் அட்டாக் குறித்த பயம் மனித வாழ்க்கையில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இதயத்தில் எத்தனை அடைப்பு உள்ளதோ ? அதற்கு என்ன மருத்துவம் பார்க்க வேண்டும் ? என மனதில் அச்சத்தைக் கொண்டிருக்கிறீர்களா ? கவலைப்படாதீங்க … காய்கறி வைத்தியத்தின் மூலம் அதனை சரிசெய்து விடலாம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்,
 

heart attack medicine plantain
Author
Chennai, First Published Mar 22, 2019, 11:47 PM IST

பொதுவாக காய்கறி வைத்திய முறையைக் கையாண்டால் அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் அறிஞர்கள். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத் துடிப்பும் சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வராததால் காய்கறி வைத்தியர்கள் சொல்லும் மருந்துதான் தினமும் ஒரு மொந்தன் வாழைக்காய்.

ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று  சாப்பிட்டால் இவை அத்தனையும் நம் கட்டுப்பாட்டில் வரும் என்கின்றனர்.

heart attack medicine plantain

இதயம் சீராக செயல்பட பொட்டாசியம் (துவர்ப்புச் சத்து) மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டு அரைத்து கூழாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத் தேவையான பொட்டாசியம் வாழைக்காயின்  மூலமே கிடைக்கிறது.

heart attack medicine plantain

வாழைக்காயில் நார்ச் சத்து அதிகம் என்பதாலும் சி வைட்டமின் நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து என்று சொல்லாம்.
இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது. சி விட்டமின் இருப்பதால் நுரையீரலும் வலுப்பெற்று சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

heart attack medicine plantain

இதில் 913 மில்லி கிராம் பொட்டாசியம் அதிகம் இருப்பதால்  கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள் B6, B12 உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.

heart attack medicine plantain

மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது. தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும் வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி என்கின்றனர் காய்கறி வைத்தியர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios