Health Minister V Vijayabaskar and Secretary Radhakrishnan are at least nights at night
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் செயலாளர் ராதாகிருஷ்ணனும் இரவிலாவது பிரியுவாங்களா எனவும் டெங்கு கொசு அவர்களை கடிக்காமல் சாதகமாக செயல்படுகிறது எனவும் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி நக்கல் அடித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் செயலாளர் ராதாகிருஷ்ணனும் இரவிலாவது பிரியுவாங்களா எனவும் டெங்கு கொசு அவர்களை கடிக்காமல் சாதகமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதுவரை தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் டெங்குவால் பலியாகி உள்ளனர் எனவும், தனியார் மருத்துவமனை டெங்கு உயிரிழப்பை கட்டுப்படுத்தும் போது அரசுவால் செய்ய முடியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.
