எல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா?  ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என வழக்கம் போல சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், “தமிழகத்தில் அரசியல் கூட்டங்களில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் எனது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அனைத்து வீடுகளிலும் ஆதரவு கேட்கும் போது நண்பர் ரஜினி வீட்டை நான் விடுவேனா? ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ரஜினியும் நானும் சினிமாவில் இருக்கும்போதே போட்டியாளர்கள் தான்; பொறாமை இல்லை என்றார்.

இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் ‘’இன்னைக்கு முடிவு எடுக்கப்போறாராம்... அதையும் ஏன் தடுக்குறீங்க கமல் அவர்களே..’’என வேதனை தெரிவித்துள்ளனர்.