HD Kumaraswamy invites opposition heavyweights to swearing-in ceremony

பல்வேறு இன்னல்களுக்கிடையே கர்நாடகா முதல்வராக தேவே கவுடா மகன் குமாரசாமி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடகத்தில் முதல்வராக குமாரசாமி முதல்வராக பதவியேற்றபின் நாளை மறுநாளே அவர் பெரும்பான்மையை நிரூபிக்கிறார். கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்களை பங்கேற்க குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தேவகௌடா கூறுகையில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் வைக்காதவர்கள் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளோம். இந்த மேடை பாஜகவுக்கு எதிராக மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்று திரள முதல் நடவடிக்கையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்த பிரமாண்டவிழாவில்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் அஸ்ஸாம் முத்லவர் பிரபுல்லா குமார் மஹான்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சோனியா மற்றும் ராகுல் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். நாளை பதவிக்க உள்ள இந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஒருலட்சம் பேர் வரை திரளுவார்கள் என சொல்லப்படுகிறது.